பொருளாதார மீட்சி: இந்திய உயர்மட்டக்குழு சந்திப்புகள்!


இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட குழுவினர் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.வெளிவிவகார செயலாளருடன் இந்திய நிதியமைச்சின் செயலாளர் அஜய்சேத் மற்றும் பிரதம ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் உதவி குறித்து ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றன,முதலீடுகளை ஊக்குவித்தல் இணைப்பு மற்றும் பொருளாதார இணைப்புகளை வலுப்படுத்துதல் மூலம் இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு இந்தியா தயாராகவுள்ளது என்பதையும் இந்திய குழுவினர் வலியுறுத்தினர்.

இதேநேரம் இந்திய நிதி அமைச்சின் செயலாளர் அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா ஆகியோர்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று வியாழக்கிழமை சந்தித்தனர்.No comments