யாழ் நுலகத்தைப் பார்வையிட்டா யப்பான தூதுவர்


இலங்கைக்கான யப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணம் செய்தார்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் நூலகத்துக்கு பயணம் செய்த தூதரை மாநகர முதல்வர் மணிவண்ணன் மாலை அணிவித்து வரவேற்றார்.

நூலகத்தை பார்வையிட்ட யப்பான் தூதுவருக்கு நூலகத்தின் ஒவ்வொரு பகுதிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன் வரலாற்று விடயங்கள் தொடர்பாகவும் கூறப்பட்டது. விசேடமாக அங்கு காணப்பட்ட யப்பானிய மொழி நூல்களை பார்வையிட்டார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் யாழ்ப்பாணப் பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் நூலக அலுவலர்கள் தூதுவருக்கான விளக்கத்தை வழங்கினர்.

No comments