பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு


பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரரேணை இன்று திங்கட்கிழமை நடத்தப்படுகிறது.  இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அவரது ஆளும் கட்சியான கொன்சர்வேடிவ் கட்சியினால் நடத்தப்படவுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு பிரித்தானியப் பிரதமர் மற்றும் கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிலிருந்து அவரை நீக்க வழிவகுக்கக்கூடும்.

ஜோன்சனின் தலைமைக்கு வாக்களிக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான கடிதங்கள் கிடைத்ததாகக் கட்சியின் அதிகாரி கிரஹாம் பிராடிகூறினார்.

திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை (17:00-19:00 GMT) வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேரில் நடைபெறும் என்று அவர் கூறினார்.

359 பழமைவாத அரசியல்வாதிகளில் ஜோன்சன் வாக்குகளை இழந்தால், அவர் கொன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்படுவார். வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்கு இன்னொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள முடியாது.

No comments