நச்சு நுண்ணுயிரிகள் கண்டுபிடிப்பு: சொக்லேட் நிறுவனம் முடக்கம்


பெல்ஜியம் வைஸ் - Wieze நகரத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய சொக்லெட் (பேரி காலேபாட் - Barry Callebaut ) தயாரிக்கும் தொழிற்சாலையில் உணவை நச்சுப்படுத்தும் நுண்ணுயிரிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலை மிகப்பெரிய அளவில் திரவ சொக்லேட்டுகளை தயாரித்து வந்தது. ஜூன்  25 ஆம் திகதி வரை விநியோகம் செய்யப்பட்ட சொக்லெட்டுகளை கடைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அத்தொழிற்சாலை தற்போது தனது விநியோகஸதர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மூன்று மாத கால தீவிர ஆய்வுக்கு பின்னரே இந்த தொழிற்சாலையில் மீண்டும் சொக்லேட் தயாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

No comments