1932வது நாளாக போராட்டம்!
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்றுடன் 1932வது நாளை தாண்டி தொடர்கின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே 1932வது நாளாக இன்று வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் கண்டிவீதியின் ஓரங்களில் அரசின் புதிய பொருளாதார தடைகளிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும்; போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே வடமாகாணத்தில் கிளிநொச்சியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கிழக்கில் அம்பாறையிலும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க்ப்பட்டிருந்தது.

இதனிடையே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் திரிபுபடுத்தி பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் கொடும்பாவி அண்மையில் ஜநா அலுவலகம் முன்னதாக தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.No comments