டொலர் தேடும் டக்ளஸ்!



தமிழகத்திலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கான  அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழங்கி வந்திருந்த நிலையில் அறிவிப்பு பிசுபிசுக்கத்தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் பொருட்களை கொள்வனவ செய்ய போதிய டொலர்கள் இல்லாதுள்ளதாக தற்போது அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு,இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடக்கு மாகாணம் அதற்கு மேலாக வடமத்திய மாகாணம் நன்மையை பெறும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என டக்ளஸ் முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவை நிறைவடைந்ததும் எமது மக்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிய படகு இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை நோக்கிப் புறப்படும்” என்றும் டக்ளஸ் தெரிவித்திருந்தார்.


No comments