மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை சட்டை இல்லாமல் பார்க்க சகிக்காது - புடின் பதில்


ஜேர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது, புடினை விட நாம் கடுமையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட அவரைப்போலவே சட்டை அணியாமல் குதிரை சவாரி செய்ய வேண்டும் என பிரிதானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சனும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கிண்டலடித்திருந்தனர்.

அதற்குப் பதில் வழங்கிய புடின் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சட்டை அணியாவிட்டால் அவர்களை பார்க்க சகிக்கமுடியாது என விமர்சித்துள்ளார்.

இதேநேரம் நேட்டோவில் சுவீடன், பின்லாந்து இணைவது பற்றி ரஷ்யா கவலை கொள்ளவில்லை என தெரிவித்த அதிபர் புதின், இராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ, இராணுவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தினாலோ பதிலடி தரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பகுதிகளுக்கு அதே அளவிலான அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும் என்றார்.

No comments