பாடசாலை ஆசிரியரும் மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகம்: மக்கள் வீதியில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை தேடி காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல்  துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளதுக்கு எதிர்ப்புப் தெரிவித்து முல்லைத்தீவு  நகர் பகுதியில் 30 ஆம் திகதி காலை பத்து மணிக்கு  பெண்கள் பலர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 

No comments