யேர்மனியில் நீதிமன்ற வாசலில் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு


யேர்மனியில் பொண் நகரத்தில் அமைந்திருக்கும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாசலில் நேற்று செவ்வாய்க்கிழமை வெட்டப்பட்ட மனித தலையை அடையாளம் தெரியாத நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலை துண்டிக்கப்பட்ட உடலம் ரைன் ஆற்றிலிருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது நபர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

No comments