சுவீடன், பின்லாந்து நேட்டோவில் இணைய ஆட்சேபனையைக் கைவிட்டது துருக்கி!


நேட்டோ கூட்டணியில் உறுப்பினராவதற்கு  ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகளை ஆதரவளிக்க துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.

ஸ்காண்டிநேவிய நாடுகளின் சேருவதற்கான முயற்சிகளை அது ஆரம்பத்தில் எதிர்த்தது. துருக்கியின் ஆதரவு இல்லாமல் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் சேர முடியாது.

குர்திஷ் போராளிகளைப் பாதுகாப்பதாக ஸ்வீடன் மற்றும் பின்லாந்து மீது துருக்கி குற்றம் சாட்டியது.  தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) தீவிரவாதிகளை ஸ்வீடன் புகலிடமாக வைத்திருப்பதாக துருக்கி நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஸ்டாக்ஹோம் அதை மறுத்தது. தற்போது  துருக்கியின் சில கோரிக்கைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. 

மேலும் ஸ்வீடிஷ் மற்றும் ஃபின்னிஷ் சட்டத்தில் திருத்தங்களின் கீழ் போராளிகள் ஒடுக்குமுறையை எதிர்கொள்ள நேரிடும்.

ரஷ்யா இரு நாடுகளும் இணைவதை கடுமையாக எதிர்க்கிறது மற்றும் மேற்கின் தற்காப்பு இராணுவக் கூட்டணியின் விரிவாக்கத்தை உக்ரேனில் அதன் போருக்கு சாக்காகப் பயன்படுத்தியுள்ளது.

ஆனால் மாஸ்கோவின் படையெடுப்பு எதிர் விளைவை ஏற்படுத்தியது, இரண்டு நோர்டிக் நாடுகளும் நேட்டோவில் இணைவதற்கான பாதை இப்போது தெளிவாக உள்ளது.

துருக்கியின் கவலைகளை நிவர்த்தி செய்யும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.

சந்தேகத்திற்குரிய குர்திஸ் தீவிரவாதிகளை துருக்கியிடம் ஒப்படைக்க சுவீடன் ஒப்புக்கொண்டுள்ளது.

இரண்டு நோர்டிக் நாடுகளும் துருக்கிக்கு ஆயுதங்களை விற்பதற்கான தங்கள் கட்டுப்பாடுகளை நீக்கும்.

No comments