ஞானசார தேரருக்கும் பெற்றோல் இல்லையாம்!இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.

முஸ்லீம்களை அவமதித்தமை தொடர்பான  வழக்கு நேற்று முன் தினம் (28)கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள, கலகொட அத்தே ஞானசார தேரர் இதன்போது மன்றில் ஆஜராகவில்லை. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் கூடிய போக்குவரத்து சிக்கல் காரணமாக, அவர் மன்றில் ஆஜராகாத நிலையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


No comments