தலை சுற்ற வைக்கும் இந்து சமுத்திரத்தின் முத்து!இலங்கையில் இன்று என்ன நடக்கிறது 

ஒரு சிறு பார்வை:

 # நாடளாவிய ரீதியில் உள்ள  எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

# கடமைகளுக்கு செல்ல எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி கிளிநொச்சி அரச பேருந்து சேவையின் ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக பாடசாலை சேவையினை முன்னெடுத்த அரச பேருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்த நிலையில் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு சென்ற ஆசிரியர்கள், திரும்பி வருவதற்கு 4 மணியை கடந்தும் பேருந்து சேவையை பெற முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.

# எரிபொருள் பற்றாக்குறையினால் ரயில் சேவை முழுமையாக பாதிப்படைய கூடும் : நேற்று  26 ரயில் சேவைகள் இரத்து

#  வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவித்தல் விடுத்துள்ளன.

அதற்கமைய, இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், ஏனைய சில வங்கிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும் கொடுக்கல் வாங்கல் வாங்கல் நடவடிக்கைக்காக திறக்கப்பட்டிருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# சிறந்த தலைமைத்துவத்துக்கான தட்டுப்பாடே நாட்டின் முக்கிய பிரச்சினை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்


No comments