போராட்டம் கைவிடப்பட்டது:ஆனாலும் மின்துண்டிப்பு!மின்சாரசேவைகள் இலங்கை முழுவதும் நேற்றிரவு அத்தியாவசிய சேவையாக்கப்பட்ட நிலையில் கோத்தபாயவுடனான சந்திப்பையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன்.

எனினும் இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணம், திருகோணமலை, ஹட்டன், நுவரெலியா, கொழும்பு, கண்டி, மஹியங்கனை, கொட்டகலை, இரத்மலானை, தெஹிவளை, பலாங்கொடை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வடமாகாணத்தில் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியிருந்தது.


No comments