கழுத்தை பிடித்து வெளியேற்றபடும் அரச பணியாளர்கள்! அரச ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய இலங்கை ரசு தன்னால் இயலுமான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துவருகின்றது.

ஏற்கனவே தொழில் தேடி நாட்டை விட்டு வெளியேற அரச பணியாளர்களை அனுமதித்துள்ள இலங்கை அரசு ஜந்துவருட விடுமுறையும் வழங்க முன்வந்துள்ளது.

இந்நிலையில் அரச பணியாளர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவைக்கு இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


No comments