ரணிலே பயிற்சி தந்தார்!பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தே நாம் பயிற்றுவிக்கப்பட்டோம். அவரிடமிருந்து நல்ல விடயங்களை நாம் கற்றுக்கொண்டுள்ளோம். எனினும், ராஜபக்சக்களை பாதுகாப்பது, திருடர்களை பாதுகாப்பது உள்ளிட்ட எந்த ஒரு கெட்ட விடயங்களையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுத்த ரணில் இந்தியாவின் மூன்று பிரதிநிதிகள் இலங்கைக்கு வருவதாக கூறினார். இந்தியா இலங்கைக்கு உள்நோக்கங்களின்றி கடனை வழங்குவதில்லை. இவ்வாறான நிலையில் கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதற்காகவா இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்ற அமர்வை ஒரு வாரத்துக்கு  புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்திருந்தபோது பாராளுமன்றத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி தப்பியோடியதாக ரணில் விமர்சித்திருக்கிறார்.மேலும் தன்னால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தப்பியோடுவது தனக்கு தோல்வி எனவும் ரணில் கூறியுள்ளார்.ரணில் தோல்வியடைந்துள்ளார் என்பதே  இப்போதா அவருக்கு தெரிய வருகின்றது எனவும் தெரிவித்தனர்.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தே நாம் பயிற்றுவிக்கப்பட்டோம். அவரிடமிருந்து நல்ல விடயங்களை நாம் கற்றுக்கொண்டுள்ளோம். எனினும், ராஜபக்சக்களை பாதுகாப்பது, திருடர்களை பாதுகாப்பது உள்ளிட்ட எந்த ஒரு கெட்ட விடயங்களையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை எனவும் மரிக்கார் கூறினார்.

No comments