ஆட்களின்றி கூடிய இலங்கை நாடாளுமன்றம்!

இலங்கையில்  மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும். கள்வர்களே இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு தெரியவில்லை. ஆகையால், துன்பப்படும் மக்களுடன் நாங்கள் கைகோர்க்கின்றோம். ஆகையால், இந்தவார சபை அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கிறது என்றார்.

அதேவேளை இந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால், அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கிவிட்டு, இவ்வாரம் சபை அமர்வை நாங்களும் புறக்கணிக்கின்றோம் என ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியுமான அனுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்தார்.

அதேவேளை நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதன்போது உரையாற்றிய வடிவேல் சுரேஷ் எம்.பி, இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு சாப்பிட இல்லை. எரி​வாயு இல்லை, பெற்றோல் இல்லை. பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு போக முடியவில்லை. ஆக, இந்த சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லையெனத் தெரிவித்த வடிவேல் சுரேஷ் எம்.பி, நான் வெளியேறுகின்றேன் எனக் கூறி சபையில் இருந்து வெளியேறிவிட்டார்.


No comments