மீண்டும் மத்தளவிற்கு அள்ளிக்கொட்டும் அரசுமகிந்த தரப்பினால் சீன உதவியுடன் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தயாராகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்தள விமான நிலையத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

காட்டு யானைகளின் பிரவேசத்தை தடுப்பதற்காக பாதுகாப்பு வேலிகளை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்கள் பட்டினி சாவை எதிர்கொண்டுள்ள நிiலையில் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட மத்தள விமான நிலையம் மூடப்பட்ட நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments