கஜேந்திரன் முதுகில் குத்து! போராட்டம் தொடர்கிறது!!குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அகற்றப்பட்டு விகாரை அமைத்து புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

புதிதாக கூட்டணியமைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என அனைத்து கட்சி இரண்டாம் மட்ட தலைவர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


இதனிடையே முல்லைத்தீவு குருந்தூர் மலையை அபகரித்து பௌத்த அடையாளமாக்க முயலும் செயற்பாட்டை தடுத்து நிறுத்த முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் முதுகில் குத்தி பௌத்த பிக்கு ஒருவர் தாக்குதல் முயற்சி நடந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறதெனவும் தெரியவந்துள்ளது.


No comments