இலங்கையில் பெற்றோலே இல்லையாம்!


இலங்கையில் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் கையிருப்பு இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், ஜூலை 2வது வாரத்தில் டீசல் கிடைக்கும்  எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் ஏற்றுமதி தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அறிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்.குடாநாட்டிலும் எரிபொருள் முற்றாக இல்லாதுள்ள நிலையில் இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எரிபொருள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்தும் அத்தியாவசிய சேவையினருக்கும் பொதுமக்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென  யாழ் மாவட்ட மேலதிக செயலர்; தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகத்தில் ஒரு பங்கு திருகோணமலையை மையமாக கொண்ட இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments