எரிபொருள் பஞ்சம்:இந்திய தூதரகத்திற்கும் பஞ்சம்!



பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாத்திரமே நடைபெறும். செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற மாட்டாது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அது தொடர்பில் அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப்  பிரிவு, 2022 ஜூன் 30 முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும். 


இதே வேலை ஏற்பாடுகள் யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதுடன், அந்த அலுவலகங்களும் இந்த நாட்களிலேயே சேவைகளை வழங்கும்.


அவசர விசாரணைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளினூடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


கொன்சியூலர் விவகாரப் பிரிவு - கொழும்பு - consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - யாழ்ப்பாணம் - jaffna.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - மாத்தறை - matara.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - கண்டி - kandy.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - திருகோணமலை - trincomalee.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - குருநாகல் - kurunegala.consular@mfa.gov.lk ஆகிய மின்னஞ்சல்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments