அச்சுறுத்தி அகற்றப்பட்டனர்!இலங்கையில் காலி கோட்டை வளாகத்தில் கோட்டா கோ ஹோம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான வேளை இக்குழுவினர் காலி கோட்டை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இவர்கள் பொலிஸாரால் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

No comments