துறைமுகங்களிற்கு எதிர்ப்பு !பருத்தித்துறை, பேசாலை, குருநகர் ஆகிய இடங்களிலும் விரைவில் மீன்பிடி துறைமுகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதென அரச அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் துரதிஸ்டவசமாக சில தமிழ் பிரதிநிதிகள் அதை தடுக்கின்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர். அதாவது குறித்த சில தமிழ் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்திகளை தடுப்பதையே தமது வழமையான செயலாக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

அவ்வாறான ஒரு பொய்த்தனமான  பிரசாரங்களையே குறித்த பருத்தித்துறை, பேசாலை, குருநகர்  துறைமுக  உருவாக்கத்திலும் அவர்களால் செய்யப்பட்டுவரகின்றது. ஆனாலும் அவர்களது தடைகளையும் பொய்யான பிரசாரங்களையும் கண்டுகொள்ளாது மக்களின் தேவைப்பாடுகளை நிறைவுசெய்து கொடுப்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இதேநேரம் எமது காலத்தில் எந்தெந்த பிரதேசங்களில் மீன்படி முறைமுகங்கள் உருவாக்கப்படுகின்றதோ அந்தந்த பிரதேச மக்களுக்கே அந்த துறைமுகங்களில் முன்னுரிமையும் கூடிய உரிமையும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னைய நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் தற்போது முழுமையாக சிங்கள மீனவர்கள் வசம் சென்றுள்ளது.

இதiனால் பருத்தித்துறை, பேசாலை, குருநகர் துறைமுகங்களிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது.


No comments