வடமாகாணம் நல்லவிலையில் விற்பனை!

 


தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசு அபிவிருத்தி  செய்வதாககூறி தேசத்தை விற்கப் போகிறார்கள் என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அரச சார்பற்ற அமைப்பான தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமெனும் தென்னிலங்கை அiமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பிலேயே ஆலம் இந்தியாவை குற்றஞ்சாட்டியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குரூப் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது

தற்போது இலங்கைக்கு இந்தியாவின் எரிபொருள் விநியோகம் வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுவிட்டது.அத்துடன் இந்தியா தற்போதைய நிலையில் எமக்கு பாரிய உதவிகளை வழங்கத் தயாரில்லை. ஆனால் வடபகுதியில்  வளங்களை பாவிப்போம் என்பது அவர்களுடைய குறிக்கோளாகக் காணப்படுகிறதெனவும் ஆலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


No comments