மகிந்த குடும்பத்தை கைவிட்ட கோத்தபாய?அலரிமாளிகை மீதான தாக்குதலின் பேர்து மகிந்தவுடன் நின்றிருந்த அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசிகள்; வேண்டுமென்றே தங்களை காப்பாற்றுவதை தாமதித்தனர். ஆறு மணித்தியாலங்களின் பின்னரே வந்தனர் என குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

மகிந்த குடும்பத்தினர் மன்றாடிய போதிலும் இராணுவத்தினர் இரவு 11 மணிவரை உதவிக்கு வரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் வேண்டுமென்றே உதவிக்கு வருவதை தாமதித்தனர் என்பதை மகிந்த புரிந்துகொண்டுள்ளார் என தெரிவித்த வீரதுங்க.கோத்தபாய தனது சகோதரர்களை மிரட்ட முயல்கின்றார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் அன்றைய தினம் ஜனாதிபதி இராணுவத்தினரை சீற்றத்துடன் அழைத்தபோதிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை என ஜனாதிபதியுடன் இருந்த இரு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியால இராணுவத்தினரையோ பொலிஸாரையோ கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் இராணுவத்தினரை ஒடுக்குமுறைகளில் ஈடுபடுமாறு தான் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழக்கூடும் என அஞ்சிய சவேந்திரசில்வா தனது படையினரை பயன்படுத்துவதற்கு தயங்கினார் என தெரியவந்துள்ளது.


வன்முறைகும்பல் இலங்கை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வாசல்கதவுகள் மீது தாக்குதலை மேற்கொண்டவண்ணமிருந்தன.-அவர்களின் எண்ணிக்கையும் சீற்றமும் ஆபத்தான விதத்தில் அதிகரித்தவண்ணமிருந்தது.


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரரும் அவரது வம்சத்தின் தலைவருமான மகிந்த ராஜபக்ச அப்பாச்சி என அன்புடன் அழைக்கப்பட்டார்.

மே9 அவர் தனது அலரிமாளிகை வீட்டின் இரண்டாம்மாடியில் குடும்பத்தவர்கள் உறவினர்களுடன் பதுங்கியிருந்தார்.உறவினர்கள் இராணுவ அதிகாரிகளை பதற்றத்துடன் அழைத்து தங்களை மீட்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

வாயில் கதவுகளிற்கு வெளியே, முன்னர் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட அரசஎதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பழிவாங்கிக்கொண்டிருந்தனர்-கலகத்தில் ஈடுபட்டனர்,பேருந்துகளை எரித்தனர்,ராஜபக்சாக்களின் சகாக்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தீயிட்டுக்கொழுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டார் கொல்லப்பட்டார் – அவரது உடல் வீதிக்கு இழுத்துவரப்பட்டமையினை நினைவுகூர்ந்துள்ளனர்.

எனினும் கோத்தபாய படைகள் அதிகாலையிலேயே வருகை தந்து மகிந்த குடும்பத்தை மீட்டு திருமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசென்றிருந்தது தெரிந்ததே.


No comments