காஸ் வழங்கவும் யாழ்ப்பாணத்தில் ஆமியாம்?யாழ்.குடாநாட்டிலும் சமையலிற்கான எரிவாயு பற்றாக்குறை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற நிலையில் விநியோக பணிகளிற்கு படையினரது உதவியை யாழ்.மாவட்ட செயலகம் நாட முற்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோரிக்கைக்கேற்ப எரிவாயு விநியோகிக்கப்படாமையால் வீதிகளை மறித்து போராட்டங்களை பொதுமக்கள் முன்னெடுப்பதுடன் விநியோகஸ்தர்களிடமிருந்து பறித்து செல்கின்ற சம்பவங்கள் சாதாரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments