அரச பணியாளர்கள்:விவசாயம் செய்யட்டும்!அரசாங்க ஊழியர்கள் 5 நாட்களும் கடமைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.  அனைவரும் காலத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள். இந்தச் சவாலை வெற்றி கொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றை விரைவாக செயற்படுத்த தீர்மானித்துள்ளது.

பல்வேறு காரணிகளினால் தேசிய விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க காரியாலயங்களை சூழவுள்ள காணிகளில் மேலதிக பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு சகல அரச ஊழியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள விசாலமான அரசாங்க மற்றும் தனியார் காணிகளில் தற்காலிகமாக  மேலதிக பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments