சகோதரர்கள் மூவர்:ஒருவர் உடலம் மீட்பு!நேற்றைய தினம் நண்பர்களுடன் செம்மலை கடலில் நீராடச் சென்ற போது கடலலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காவுகொள்ளப்பட்ட நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் மூன்றாவது சகோதரனின் உடலமானது நாயாற்றுக்கு நேர் மேலேயுள்ள கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரது உடலத்தையும் தேடும் பணியினை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிறந்த தினத்தில் அளம்பிலில் கடலில் குளிக்க சென்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன்(29 வயது),பத்மநாதன் விஜித் (27 வயது),பத்மநாதன் விழித்திரன் (25 வயது) காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் பத்மநாதன் விழித்திரன் (25 வயது) உடலம் மீட்கப்பட்டுள்ளது.


No comments