காலிமுகத்திடல் தாக்குதலிற்கு சென்ற கைதிகளை காணோம்!



கொழும்பில் அகிம்சை போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுள் சிறைக்கைதிகளும் இருந்தமை உறுதியாகியுள்ளது.

அதனை மூடி மறைக்க வெளியே வேலைகளிற்கு சென்ற சிறைகைதிகள் காணமால் போயிருப்ப்தாக சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது

வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அதன்போது, குறித்த கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனையடுத்து, 58 கைதிகள் காணாமல்போயுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த கைதிகள் தொடர்பான தகவல்களை தெரிந்திருப்பின், சிறைச்சாலை தலைமையகத்துக்கோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் சிறைச்சாலை தலைமையகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments