கூட்டமைப்புடன் ரணில் கோபம்:சாணக்கியன் ஆதரவாம்இனிவருங்காலங்களில் கூட்டமைப்பின் கருத்துக்களை கவனத்தில் எடுக்கப்போவதில்லையென முன்னாள் பங்காளியான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய தென்னிலங்கை அரசியல் பரபரப்பில் ரணில் ராஜபக்ச தரப்பினை காப்பாற்ற முன்னின்று செயற்படும் போதும் கூட்டமைப்பு எதிரான அணியில் உள்ளது.

இதனிடையே எதிர்க் கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை  தெரிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

No comments