பிரதமர் கதிரைக்கு தயாரில்லை:ஜனாதிபதி அதிகார குறைப்பிற்கு தயார்!



இலங்கையின் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய விடுத்த கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும்  நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின், சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு கீழ் செயற்படும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து மாத்திரமே ஐக்கிய மக்கள் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ளது.

மேலும் தற்போதைய ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலும் முன்வைத்துள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத்திட்டம் தற்போதைய தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்குமான ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுவதாகவும் நாங்கள் தெரிவிக்கின்றோம்.

இதற்கமைவாக மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு  ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

No comments