சாதனை:மகிந்த அனுராதபுரம் போய் திரும்பினார்


இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (08) காலை அனுராதபுரத்திலுள்ள மஹா போதி மரத்திற்கு வணக்கம் செலுத்தி ஆசி பெற்றதனை மிகப்பெரும் சாதனையாக செய்தி வெளியிட்டுள்ளது அவரது ஊடகப்பிரிவு.

மஹா போதிக்கு முன்பாக சமய வழிபாடுகளை மேற்கொண்ட பிரதமர், ருவன்வெலி மஹா சேயா சைத்திய பீடாதிபதியை சந்தித்ததுடன் பிரதமர் ருவன்வெலிசா ய ஸ்தூபியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அநுராதபுரத்தில் பிரதமரின் மத அனுஸ்டானங்களின் போது, விகாரைகளை தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் பிரதமரை அணுகி சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட செய்தியையே தென்னிலங்கை ஊடகங்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளன.
No comments