சுமா அமைச்சராகிறார்?-சாணக்கியனிற்கு கதிரை!


ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் எம்.ஏ.சுமந்திரன் அல்லது இரா.சாணக்கியனிற்கு பதவியொன்று கிட்டலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவையை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் என்றும் அறியமுடிகின்றது. 

அதில், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த நால்வருக்கு வாய்ப்பு வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது. 

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தோருக்கு வாய்ப்பில்லை என்றும், சிறுப்பான்மை கட்சிகளுடன் பேரம்பேசி இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் கூட்டமைப்பிற்கு ஒரு அமைச்சர் பதவியை வழங்க பேசப்பட்டுவருகின்ற நிலையில் அமைச்சராக எம்.ஏ.சுமந்திரனும் நாடாளுமன்ற பிரதிக்குழுக்களது தலைவராக சாணக்கியனும் கதிரையேறலாமென தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

No comments