ரணிலை வாழ்த்த இந்திய தூதர் நேரில் சென்றார்!

ரணிலை மீள கதிரைக்கு அழைத்து வந்தமையின் பின்னால் இந்திய,அமெரிக்க பின்னணி பற்றி பேசப்படுவருகின்றது.

இதனிடையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தனது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பில். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

பொருளாதார மீட்சி, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விடயங்களில் இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாடு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருந்த காலத்தில், இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


No comments