மகிந்த வெளியேறினார்! இன்று அதிகாலை அலரி மாளிகையிலிருந்து பலத்த பாதுகாப்பின் மத்தியில் மகிந்த வெளியேறியுள்ளார்.

நேற்றிரவு அலரிமாளிகையைச் சுற்றிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனால் நேற்று இரவு முழுதும் முன்னாள் பிரதமரால் வெளியேற முடியவில்லை.

இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் அவர் அலரிமாளிகையில் இருந்து வெளியில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே நேற்றைய சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் முன்னால் பிரதமர் மஹிந்த கைது செய்யப்படலாமென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக வைத்திய சிகிச்சைக்காக நாட்டை விட்டு வெளியே செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments