தமிழ் இறையாண்மைக்கு" சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும்!

 


இலங்கையில் பொருளாதார நெருக்கடியை நிறுத்த "தமிழ் இறையாண்மைக்கு" சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான போராட்டம் இன்று புதன்கிழமையுடன் 1900ஆவது நாளினை தாண்டி தொடர்கின்றது. நிலையில் தொடர்போராட்டத்தை நினைவு கூரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தென்னிலங்கைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் “தமிழ் இறையாண்மைக்கு” அழைப்பு விடுக்க வேண்டும், அது சிங்கள மக்களை எந்தவித முரண்பாடுகளும் துன்பங்களும் இன்றி சுதந்திரமாக வாழ அனுமதிக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


No comments