புற்று நோய் அறுவைச் சிகிற்சை: பொறுப்புக்களைக் கையளித்தார் புடின்??


ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஊக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிபர் புதினின் உடல் நிலை குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.

அண்மையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoiguயுடனான கலந்துரையாடலின் போதும் மேஜையை இறுக்கமாக புதின் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி அவரது உடல் நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளை கிளப்பின.

ஏற்கனவே புதினிக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

No comments