நம்பிக்கையில்லை:ஆதரவளிக்க இரு நிபந்தனைகள்கோத்தா அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் சுதந்திரக்கட்சி இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகவே இரண்டு நிபந்தனைகளை முன்வைக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அந்த குழு நாடாளுமன்றில் நேற்றுக் கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லத் தீர்மானத்தை நிறைவேற்றும் பட்சத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்க நடவடிக்கை எடுப்பதுடன் இடைக்கால அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி விருப்பத்தை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனைகளையே சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்துள்ளது.

இதுவரை இடைக்கால அரசை பொறுப்பேற்க சஜித் தரப்பு பின்னடித்தே வருகின்றது.

No comments