மீண்டும் பிரதி சபாநாயகராக சியம்பலாபிட்டிய!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பாராளுமன்ற பிரதி சபாநாயகராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் மோதலைத் தொடர்ந்து சியம்பலாபிட்டிய தனது பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ஏப்ரல் 30 ஆம் திகதி ராஜினாமா செய்ததுடன், அவரது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.


எவ்வாறாயினும், சியம்பலாபிட்டிய இன்று (05) எதிர்க்கட்சியின் தரப்பில் அமருவார் என நம்பப்படுகிறது, மேலும் அவரது பெயரை அந்த பதவிக்கு பரிந்துரைக்க எதிர்க்கட்சியே தயாராகி வருகிறது.

No comments