தமிழீழ தலைநகர் திருமலையில் பதுங்கிய மகிந்த குடும்பம்!

திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபக்ச குடும்பம் தஞ்சமடைந்திருக்கின்றது என தகவல் வெளியானதையடுத்து கடற்ப்படை தளம் முன் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே மகிந்த தரப்பு வெளியேறுவது தொடர்பில் பெரும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதால், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் தேசிய மட்டத்தில் தீர்வுகளை காணவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பணிகளை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளனர்.

இதனிடையே பண்டாரநாயக்க உள்ளுர் விமான சேவை ஊடாக மகிந்த திருமலைக்கு தப்பித்த ஆவணங்களை சமூக ஊடகங்கள் பகிர்ந்துள்ளன. 


No comments