சோதிடருமான ஞானக்காவின் வீடு, கோவில், விடுதிக்கு தீ வைப்பு


அநுராதபுரத்தில் உள்ள சோதிடர் ஞானக்காவின் வீடு, கோவில், விடுதி என்பன மக்களால் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

சோதிடர் ஞானக்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரும் அவர்களின் ஆஸ்தான சோதிடருமாவார்.

ஞானக்காவின் வீட்டுக்கு இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு அளித்திருந்த நிலையில் இன்று நள்ளிரவு ஞானக்காவின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இராணுவத்தினர் வீட்டின் முன் பாதுகாப்பு வழங்கிய போதும், போராட்டக்காரர்கள் ஞானக்காவின் வீட்டைச் சுற்றியிருந்த மதில் சுவரை உடைத்து உள்நுழைந்தனர்.

உள்நுழைந்த போராட்டக்காரர்கள் ஞானக்காவின் வீட்டுக்குள் இருந்த அவரது உடமைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். அத்துடன் வீட்டையும் தீவைத்து எரித்துள்ளனர்.

இதனைத்தொர்ந்து ஞானக்காவின் கோவில் எரியூட்டப்பட்டுள்ளது. நவநுவர வீதியிலுள்ள ஞானக்காவின் தங்குமிட விடுதி முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்த அனைத்து சொத்துக்களையும் அழித்ததுடன் தீயிட்டு எரித்தனர்.


No comments