நாடாளுமன்றிற்கு புதிய எம்பி!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து, அவருடைய பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியது.

இந்த நிலையில், அவரது வெற்றிடத்துக்கு  ஜகத் சமரவிக்ரம இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

No comments