வேலைக்கு வரவேண்டாம்:எரிபொருள் இல்லையாம்!



இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வீடு திரும்புவதற்கு எரிபொருள் இல்லாவிட்டால் தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

 

No comments