தேசிய தலைவர் மண்ணிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது பேரணி!


இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டு

வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக வல்வெட்டித்துறையிலிருந்து  முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது இன்று வல்வெட்டித்துறையிலிருந்து காலை ஆரம்பமானது.

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு நீதியைப்பெற்றுக்கொடு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியானது  முள்ளிவாய்க்கால் நோக்கி நடைபயில்கின்றது.

கிழக்கு பேரணியானது மட்டக்களப்பு நகரை வந்தடைந்து நகர் ஊடாக திருகோணமலை வீதியை சென்றடைந்து திருகோணமலை நோக்கி பேரணி சென்றது.

நாளை திருகோணமலையிலிருந்து முல்லைதீவு சென்று நாளை மறுதினம் முள்ளிவாய்க்கால் பேரணி சென்றடைந்து அங்கு இனஅழிப்பு வார நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments