யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சிமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அருகில் இன்று (12) இடம்பெற்றது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது 2009ஆம் ஆண்டு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவையும் நிலையில்  மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளது.

 இன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவுப்படுத்தும் முகமாக அரிசி மற்றும் உப்பு போடப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பினரும் இணைந்து ஆதரவு வழங்கியிருந்தனர்.

No comments