வருகிறது ரஸ்ய எரிபொருள்!

 


இலங்கையின் எரிபொருள் கோரிக்கையை ரஷ்யா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் முதல் செயலாளர் அனஸ்தேசியா ஹக்லோவா தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் தேவையான உதவிகளை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இலங்கை எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என முதலாவது செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

No comments