துமிந்த கைதாகின்றார்!



கோத்தாபாயவின் கட்டளைபடி கொழும்பில் தமிழ் இளைஞர் யுவதிகளை கொலை செய்து பொதுமன்னிப்பில் தப்பித்த துமிந்த மீண்டும் கைதாகின்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறும் மற்றுமோர் உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை உச்ச நீதிமன்றம் இன்று (31) இடைநிறுத்தியுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த  சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் ஸ்வர்ணா பிரேமச்சந்திர ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

இரண்டு வழக்குகளையும் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சில்வாவுக்கு பயணத் தடை விதித்தும் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments