உக்ரைனில் ஒரு நீண்ட போரை நடத்த புடின் திட்டம் - அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை


உக்ரைனில் ஒரு நீண்ட போரை நடத்துவதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் நேற்று செவ்வாயன்று அமெரிக்க செனட் குழுவில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா வெற்றி பெற்றாலும் மோதலை முடிவுக்கு கொண்டுவர முடியாது அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது.

ரஷ்யா உக்ரைனின் தலைநகரைக் கைப்பற்றும் முயற்சிகள் கடும் எதிர்ப்பின் காரணமாக கைவிட்ட நிலையில் கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனாலும் ரஷ்யப் படைகளுக்கு உக்ரைனின் எதிர்ப்பு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுகிறது.

புடின் இன்னும் டான்பாஸுக்கு அப்பாற்பட்ட இலக்குகளை அடைய விரும்புகிறார். ஆனால் புதினின் இலட்சியத்திற்கும் அவரின் இராணுவத்தின் திறமைகளுக்கும் இடையில் பொருந்தாத தன்மையை எதிர்கொள்வதாக அவ்ரில் ஹைன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை மற்றும் எரிசக்தி விலைகள் மோசமடைந்ததால், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பலவீனமடையும் என்று ரஷ்ய அதிபர் புடின் அநேகமாக எண்ணுகிறார் என்றும் அவர் கூறினார்.

No comments