உக்ரைனில் போர்க்குற்ற விசாரணை! ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டணை!

 


உக்ரைனிய குடிமகனைக் கொன்ற ரஷ்ய படை வீரருக்கு உக்ரைன் நீதி மன்றம் ஆயுள் தண்டணையை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட படை எடுப்பால் எழுந்து முதலாவது போர்க்குற்ற விசாரணையில் நிராயுதபாணியான உக்ரைன் குடிமகனை ரஷ்யப் படை வீரரான சுட்டுக்கொன்றதாக  வாடிம் ஷிஷிமரினுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது.


21 வயதுடைய வாடிம் ஷிஷிமரின் டாங்கி ஒன்றின் கட்டளை அதிகாரியாவார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று வடகிழக்கு உக்ரேனிய கிராமமான சுபாகிவ்காவில் 62 வயதான நபரைக் கொன்றதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

No comments