வீட்டிலிருந்தே சம்பளம்!அரச பணியாளர்களை வேலைக்கு அழைக்கும்போது அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 இதற்கான சுற்று நிரூபம் நாளை வெளியாகும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

 இதன்படி திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகள், யார் யாரை வேலைக்கு அழைக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியும்.

 அவசியமற்ற பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை. 

 இது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பது நாளை வெளியாக உள்ள சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்படும்.


No comments