எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல்!


உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் செயல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கா அரசுக்கு ரஷிய அரசு தூதரகம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

உக்ரைன் விவகாரத்தில் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயலில் ஈடுபடுகிறது. உக்ரைனுக்கு மிகவும் அதிநவீன ஆயுதங்களை தொடர்ந்து வழங்கினால் கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அதிநவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கி வருவதால் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கடுமையான போரை நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு பலத்த ஆளணி மற்றும் போர்த் தளபாட இழப்புகள் எற்பட்டுவருகின்றன.


No comments